வணிகம்

ஜிஎஸ்டி குறித்த தவறான புரிதலுக்கு ட்விட்டரில் ஹஷ்முக் ஆதியா விளக்கம்

செய்திப்பிரிவு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பான தவறான புரிதல்களுக்கு மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா ட்விட்டர் வலைதளத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

முக்கியமாக கேஸ், தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகளுக்கான கட்டணத்தை கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தும் போது இரண்டு முறை ஜிஎஸ்டி செலுத்தவேண்டும் என்று சமூக வலைதளங்களில் பரவியது. இந்த தகவல் முற்றிலும் தவறானது. இதை தயவுசெய்து சமூக வலைதளங்களில் பரப்பாதீர்கள் என்று ஹஷ்முக் ஆதியா டிவிட்டரில் விளக்கமளித்துள்ளார்.

மேலும் ஜிஎஸ்டி தொடர்பாக மக்களிடையே உள்ள தவறான புரிதல்கள் மற்றும் அவற்றுக்கான விளக்கங்களை ஹஷ்முக் ஆதியா அளித்துள்ளார்.

SCROLL FOR NEXT