வணிகம்

லாக்கரில் திருடு போனால் வங்கி பொறுப்பல்ல: ஆர்டிஐ மனுவில் ரிசர்வ் வங்கி விளக்கம்

பிடிஐ

பொதுத்துறை வங்கிகளில் உள்ள லாக்கரில் இருந்து திருடு போன பொருட்களுக்கு எந்தவொரு இழப்பீடையும் வங்கிகளிடம் எதிர்பார்க்க முடியாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் குஷ் கால்ரா தாக்கல் செய்த மனுவுக்கு ரிசர்வ் வங்கி இவ்வாறு பதிலளித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விவரங் களை வைத்துக்கொண்டு போட்டி ஒழுங்குமுறை ஆணையத்திடம் வழக்கறிஞர் குஷ் கால்ரா முறையீடு செய்துள்ளார். லாக்கர் சேவை விஷயத்தில் வங்கிகள் எல்லாம் கூட்டாக ஒருமித்த கருத்தை எடுத்துள்ளதாக குஷ் கால்ரா போட்டி ஒழுங்குமுறை ஆணையத்திடம் முறையீடு செய்துள்ளார். மேலும் இது தொடர்பாக எந்தவொரு வழிகாட்டு நெறிமுறைகளும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை என்றும் போட்டி ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவித்துள்ளார். அனைத்து பொதுத்துறை வங்கிகளும் எந்த வொரு பொறுப்புகளையும் எடுத்துக் கொள்ளாமல் மெத்தனமாக இருப்பது ஆர்டிஐ மனுவின் கீழ் தெரியவந்துள்ளது.

பாங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், பஞ்சாப் நேஷனல் வங்கி, யூகோ வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட 19 வங்கிகள் ஒரே மாதிரியான பதிலையே அளித்துள்ளன. அதாவது லாக்கர் சேவையை பொறுத்தவரை வாடிக் கையாளர்களுக்கும் எங்களுக்கும் உள்ள உறவு நிலத்தின் சொந்தக் காரருக்கும் வாடகைக்கு இருப்பவ ருக்கும் உள்ள உறவை போன்றது என்று பதிலளித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான பொருட்களைப் பாது காப்பதில் குறைந்த பொறுப்புடனே வங்கிகள் செயல்படுவது தெரிய வந்துள்ளது.

சில வங்கிகள் லாக்கர் சேவை தொடர்பான ஒப்பந்தத்தில், லாக் கரில் வைக்கப்படும் அனைத்து பொருட்களுக்கும் வங்கி பொறுப் பாகாது என வாடிக்கையாளரிடம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அது வாடிக்கையாளரின் ரிஸ்க்கை பொறுத்தே என்று கூறியிருக்கிறது.

வங்கி லாக்கரில் பொருட்களை வைப்பதற்கு கட்டணம் செலுத்தியும் எந்தவொரு பொறுப்பையும் வங்கி எடுத்துக் கொள்ளாத போது பொருட்களுக்கு காப்பீடு எடுத்து வீட்டுக்குள்ளே வைத்துக் கொள்ளலாமே ஏன் அதற்கு வங்கியில் வைக்க வேண்டும் என்று போட்டி ஒழுங்குமுறை ஆணையத்திடம் குஷ் கால்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிண்டிகேட் வங்கி, அலகாபாத் வங்கி உட்பட பல்வேறு வங்கிகள் ஒருமித்த கருத்துடன் இந்த விவகாரத்தை நடைமுறைப்படுத்தி வருவதாக குஷ் கால்ரா குற்றம் சுமத்தியுள்ளார். -

SCROLL FOR NEXT