வணிகம்

நடப்பு நிதி ஆண்டில் நேஷனல் இன்ஷூரன்ஸ் ஐபிஓ

செய்திப்பிரிவு

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான நேஷனல் இன்ஷூரன்ஸ் நடப்பு நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் பொதுபங்கு வெளியிட (ஐபிஓ) திட்டமிட்டிருக்கிறது.

இது தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் சனந்த் குமார் கூறியதாவது: பொதுப்பங்கு வெளியிடுவதற்காக மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் நிறுவனத்தின் பங்கு பட்டியலிடப்படும். கடந்த நிதி ஆண்டில் ரூ.14,283 கோடி அளவுக்கு பிரீமியம் வசூலாகி இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் ரூ.16,000 கோடிக்கு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறோம். பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா திட்டம் காரணமாக எங்களுக்கு நஷ்டம் அதிகரிக்கிறது. இந்த பாலிசியில் கிளைம் செய்பவர்களின் விகிதம் அதிகமாகும். இருந்தாலும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இந்த திட்டத்தை தொடர இருக்கிறோம் என சனந்த் குமார் கூறினார்.

SCROLL FOR NEXT