சரக்கு மற்றும் சேவை வரி வெற்றியை ஆடிட்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கடிதம் எழுதி இருக்கிறார். 2 லட்சத்துக்கு மேலான ஆடிட்டர்களுக்கு கடிதம் மூலம் இதனை தெரிவித்திருக்கிறார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஐசிஏஐ நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர், உங்களுடைய கையெழுத்துக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையை உடைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசியதன் தொடர்ச்சியாக ஆடிட்டர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை ஒழிப்பதில் ஆடிட்டர்களின் பங்கு முக்கியமானது. இந்திய ஆடிட்டர்களின் திறமைக்காக உலகம் முழுவதும் கொண்டாடப்படுபவார்கள். இந்தியாவின் பொருளாதாரத்தை பாதுகாப்பதில் ஆடிட்டர்களின் பங்கு முக்கியமானது. ஊழல் மற்றும் கறுப்பு பணம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் ஆடிட்டர்களின் பங்கு தேவை என கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தவிர இந்த கடிதத்தில் ஐசிஏஐ நிகழ்ச்சியில் மோடியின் உரைக்கான இணைப்பும் இணைக்கப்பட்டிருந்தது.
சனிக்கிழமை பேசும்போது, இந்திய விடுதலை போராட்டத்தில் ஆடிட்டர்கள் பெரிய அளவில் கலந்துகொண்டனர் என குறிப்பிட்டிருந்தார்.