வணிகம்

புதிய நிறுவனத்தை தொடங்கினார் பாபா ராம்தேவ்

செய்திப்பிரிவு

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். பரக்ராம் சுரக்ஷா என்ற பெயரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பதஞ்சலி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா கூறியதாவது: ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது. ஒவ்வொரு தனிநபரும் பாதுகாப்பாக உணரவைப்பதே எங்கள் புதிய நிறுவனத்தின் நோக்கம். அதுமட்டுமல்லாமல் நாட்டின் பாதுகாப்பையும் பலப்படுத்துவதற்காகவே பரக்ராம் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ராணுவ மற்றும் காவல்துறை பணியாளர்களை பாபா ராம்தேவ் பணிக்கு எடுத்துள்ளார். இவர்கள் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் என்று பாலகிருஷ்ணா தெரிவித்தார்.

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் பதஞ்சலி நிறுவனத்தின் பாபா ராம்தேவ் 25-வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.25,600 கோடி. பதஞ்சலி நிறுவனம் எப்எம்ஜிசி துறையில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT