வணிகம்

28 ஆயிரம் புள்ளிகளைக் கடந்ததுமும்பை பங்குச் சந்தை: புதிய உச்சத்தை தொட்டது நிஃப்டி

பிடிஐ

மும்பை பங்குச் சந்தை தொடர்ந்து மூன்றாம் நாளாக ஏற்றம் கண்டது. வர்த்தகத்தின் முடிவில் 98 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 28008 புள்ளிகளானது. வர்த்தகத்தின் இடையே குறியீட்டெண் 28126 புள்ளிகள் வரை சென்றது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி முன்னெப்போதும் இல்லாத அளவாக 8,400 புள்ளிகள் வரை சென்றது. வர்த்தகம் முடிவில் 20 புள்ளிகள் உயர்ந்து 8383 புள்ளிகளில் நிலைபெற்றது..

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் ஆட்டோமொபைல், வங்கி, நுகர்வோர்துறை சார் பங்குகளில் முதலீடு செய்ததும் ஏற்றத்துக்கு முக்கிய காரணமாகும். பணவீக்கம் குறைந்து வருவது மற்றும் தொழில்துறை உற்பத்தி குறியீடு அதிகரிப்பு ஆகியன உயர்வுக்குப் பிரதான காரணமாகக் கூறப்படுகிறது. செப்டம்பர் 2-ம் தேதி முதல் நவம்பர் 12-ம் தேதி வரையிலான காலத்தில் மொத்தம் 45 வர்த்த தினங்களில் பங்குச் சந்தை குறியீட்டெண் 27 ஆயிரம் புள்ளிகளிலிருந்து 28 ஆயிரம் புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.

முக்கியமான முன்னணி நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள் திருப்தி கரமாக அமைந்ததும், மத்திய அமைச்சரவை மாற்றியமைத்தன் மூலம் பொருளாதார சீர்திருத்தங்கள் உறுதியாக மேற்கொள் ளப்படும் என்ற அறிகுறியும் பங்குச் சந்தை உயர்வுக்குக் காரணமாக அமைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

ஆக்சிஸ் வங்கி 3.02%, பஜாஜ் ஆட்டோ 2.10%, ஹெச்டிஎப்சி 1.12%, எஸ்பிஐ 0.17%, ஐசிஐசிஐ வங்கி 1.33%, ஹெச்டிஎப்சி வங்கி 0.44%, ஐடிசி 1.55%, பார்தி ஏர்டெல் 0.64%, பிஹெச்இஎல் 0.88%, கோல் இந்தியா 0.10%, டாக்டர் ரெட 0.58%, ஹீரோ மோட்டோகார்ப் 1.50%, டாடா மோட்டார்ஸ் 1.71%, டிசிஎஸ் 0.55% அளவுக்கு உயர்ந்தன.

சிப்லா, டாடா பவர், டாடா ஸ்டீல், என்டிபிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 3 சதவீத அளவுக்குச் சரிந்தன. முக்கியமான 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் 16 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. எஞ்சியவை சரிவைச் சந்தித்தன. பங்குச் சந்தையில் மொத்தம் 1,524 நிறுவனப் பங்குகளின் விலைகள் உயர்ந்தன. 1,520 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. மொத்தம் ரூ. 3,649 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT