வணிகம்

 சரக்கு மற்றும் சேவை வரியால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயரும்: இந்திய தொழிலக கூட்டமைப்பு கருத்து

செய்திப்பிரிவு

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ள தன் காரணமாக இந்திய தொழில் துறையில் மாற்றம் உருவாகி இருக்கிறது. ஏற்றுமதியை ஊக்குவிப் பதற்கான நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பதால் வரி செலுத்து வோரின் எண்ணிக்கை உயரும். மேலும் தொழில் புரிவதற்கான சூழல் மேம்படும் என்றும் நம்பிக்கை தொழிற்துறையினரிடையே உரு வாகி இருப்பதாக இந்திய தொழி லக கூட்டமைப்பின் தலைவர் ஷோபனா காமினேனி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: புதிய பொருளாதார யுகத்தில் நாம் நுழைந்திருக்கிறோம். தொழில்புரி வதற்கான சூழலை ஜிஎஸ்டி எளி தாக்கும். தவிர புதிய தொழில்கள் உருவாவதையும் ஜிஎஸ்டி வேகப் படுத்தும். தொழில் நிறுவனங் களுக்கு உள்ளீட்டு வரி வரவு முக்கியமான ஒரு சலுகையாகும். தவிர உள்ளீட்டு வரி வரவு காரண மாக வரியின் மீது வரி செலுத்த தேவையில்லை. மேலும் பணவீக்க மும் குறையும். இது நுகர்வோர் களுக்கு சாதகமாக இருக்கும். அனைத்து நிறுவனங்களும் உள்ளீட்டு வரி வரவின் பயனை வாடிக்கையாகளுக்கு வழங்கும் என நம்புகிறோம் என ஷோபனா காமினேனி தெரிவித்தார்.

ஜிஎஸ்டி தொடர்பாக அசோசேம் கூறியதாவது: கடந்த நான்கு ஆண்டுகளாக பொருட்களின் விலை யேற்றம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. பணவீக்கத்தை அடிப் படையாக கொண்டு பார்த்தால் ஜிஎஸ்டியை அமல்படுத்த இதுவே சரியான தருணம். ஆரம்பக்கட்டதில் சில சவால்கள் இருக்கக் கூடும்.

நுகர்வோரின் தேவை குறை வாக இருக்கும் தற்போதைய சூழலில், உள்ளீட்டு வரி வரவின் சலுகைகளை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுக் காமல் இருக்க மாட்டார்கள். நிறுவனங்கள் தற்போதையை சூழலைப் பயன்படுத்தி முழு உற்பத்தி திறனை எட்ட வேண்டும் என அசோசேம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT