வணிகம்

இவரைத் தெரியுமா?- லெஸ்லி மூன்வெஸ்

செய்திப்பிரிவு

ஊடக நிறுவனமான சிபிஎஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2005-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார். 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலும் உள்ளார்.

2004-ம் ஆண்டிலிருந்து 2005-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வயோகாம் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி மற்றும் துணைத்தலைவராகவும் இருந்தார்.

1999-ம் ஆண்டிலிருந்து 2004-ம் ஆண்டு வரை ஜெனிமேக்ஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தார்.

வார்னர்ஸ் பிரதர்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, சென்சூரி பாக்ஸ் டெலிவிஷன் நிறுவனத்தின் திரைப்பட பிரிவு தொழிலுக்கு துணைத்தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

எண்டர்டெயிமெண்ட் இண்டஸ்ட்ரீஸ் கவுன்சில் அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

SCROLL FOR NEXT