வாராக்கடன் அதிகரித்திருப்பதால் ஆக்ஸிஸ் வங்கியின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 73% சரிந்து ரூ.580 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.2,175 கோடி அளவுக்கு நிகர லாபம் இருந்தது. வாராக் கடனுக் காக ஒதுக்கீடு செய்த தொகை 5 மடங்கு அதிகரித்து ரூ.3,795 கோடியாக இருக்கிறது.
அதே சமயத்தில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.12,531 கோடியில் இருந்து ரூ.14,501 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதர வருமானம் ரூ.2,338 கோடியில் இருந்து ரூ.3,400 கோடியாக உயர்ந்திருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக் கடன் 5.22 சதவீதமாகும். கடந்த வருடம் இதே காலாண்டில் 1.68 சதவீதமாக இருந்தது. நிகர வாராக்கடன் 0.75 சதவீதத்தில் இருந்து 2.18 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களுக்கான நிகர லாபம் ரூ.2,454 கோடியாக இருக்கிறது. சென்ற நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 60% குறைவாகும்.