தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள் இருவர் புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். இந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர்களான எஸ்.டி.சிபுலால் மற்றும் கோபால கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து ஆக்ஸிலோர் வெஞ்சர்ஸ் எனும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.
தொழில் முனைவோர் மற்றும் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகளை அளிப்பதற்காக இந்நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை தொழிலாக மாற்றுவதற்குரிய முதலீடுகளை ஈர்ப்பது இந்நிறுவனத்தின் பிரதான பணியாகும். சுகாதாரம், மருத்துவம் ஆகிய துறைகளைச் சார்ந்த நிறுவனங்களுக்கு உதவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக இவ்விருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.