அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு வெள்ளிக்கிழமை முடிந்தது. 104.5 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. 1,840 கோடி ரூபாய் நிதி திரட்ட இந்த நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் 104 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. அதாவது 1.38 லட்சம் கோடி ரூபாய்க்கு விண்ணப்பங்கள் வந்தன.
நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குக்கு 146 மடங்கு விண்ணப்பங்களும், ஹெச்.என்.ஐ களுக்கு ஒதுக்கப்பட்ட பங்கு களுக்கு 281 மடங்கு விண்ணப் பங்களும் குவிந்தன. சிறு முதலீட் டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 7.36 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன.
கடந்த ஆண்டு அட்வான்ஸ்டு என்ஸைம் ஐபிஓவுக்கு 116 மடங்கு அளவுக்கும், குவிஸ் கார்ப் நிறுவனத்தின் ஐபிஓவுக்கு 145 மடங்கு விண்ணப்பங்களும் குவிந்தன.
பங்கின் விலையாக 295 முதல் 299 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இரண்டாம் நாளான வியாழன் அன்று 5.7 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன