தொலைத் தொடர்பு துறையினரின் சர்வதேச நிறுவனமான ஜிஎஸ்எம்ஏ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். 2016 ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.
24 நாடுகளில் தொலைத் தொடர்பு சேவையில் உள்ள, ஸ்வீடனைச் சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான டெலி2 நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியவர்.
எரிக்சன் நிறுவனத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். மத்திய ஆசியா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தலைமை பொறுப்பில் இருந்தவர்.
ஆரிகோ அண்ட் ஆண்டர்சன் ஆலோசனை நிறுவனத்தில் தொலைத் தொடர்பு மேலாண்மை ஆலோசகராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
மின்னணு பாதுகாப்பு தீர்வுகளை வழங்கும் மார்போ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
ஸ்டாக்ஹோம் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் எம்எஸ்சி பட்டம் பெற்றவர்.