பணமதிப்பு நீக்கத்தின் காரணமான டிசம்பர் மாதத்தில், ஆட்டோ மொபைல் துறை விற்பனையில் ஏற்ற இறக்கமான போக்கு இருந் தது. வாகனத் தயாரிப்பு முன்னணி நிறுவனங்களாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, போர்டு இந்தியா நிறுவனங்கள் உள்நாட்டு விற்பனை யில் டிசம்பர் மாதம் சரிவைக் கண்டுள்ளன. அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ், ரெனால்ட், நிசான், ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்களின் உள்நாட்டு விற்பனை டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 40,057 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. டிசம்பர் மாதத்தில் 4.3% விற்பனை சரிந்துள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை டிசம்பர் மாதத்தில் 1.5 சதவீதம் குறைந்து 34,310 கார்களை விற்பனை செய்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் 34,839 கார்களை விற்பனை செய்திருந்தது.
ஆட்டோமொபைல் துறை தொடர்ச்சியாக சவாலான கால கட்டத்தில் இருக்கிறது. பணமதிப்பு நீக்கத்தால் குறுகிய காலத்துக்கு இந்த நிலைமை நீடிக்கும். கார்கள் வாங்கும் முடிவை ஒத்திவைக்கும் போக்கு விரைவில் சரியாகும் என்று எம் அண்ட் எம் நிறுவனத்தின் ஆட்டோ டிவிஷன் தலைமைச் செயல் அதிகாரி பிரவீண் ஷா குறிப்பிட்டுள்ளார்.