வணிகம்

ஹெச்எஸ்பிசி- வங்கியில் கறுப்பு பணம் பதுக்கிய இந்தியர்களின் பெயர்கள் கண்டுபிடிப்பு: மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தகவல்

பிடிஐ

ஹெச்எஸ்பிசி மற்றும் லீக் டெப்ஸ்டைன் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் குறித்த விசாரணை முடிந்துவிட்டது என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார். வெளிநாட்டு வங்கிகளில் ரூ.15,000 கோடி வரை மறைக்கப்பட்ட இரண்டு வழக்குகளில் இவர்களின் பெயர்கள் அடிபட்டன.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் பதிலளித்த நிதியமைச் சர் அருண்ஜேட்லி இதனைத் தெரிவித்தார்.

வெளிநாட்டு வங்கி களில் முதலீடு செய்துள்ள இந்தியர் கள் குறித்த விசாரணையில், ஹெச்எஸ்பிசி வங்கியில் முதலீடு செய்துள்ளதாக வெளியான 628 இந்தியர்களுக்கு எதிரான விசாரணை முடிந்துள்ளது.

இதில் 409 நபர்கள் ரூ.8,437 கோடி முதலீடு செய்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 119 நபர் களுக்கு எதிரான குற்றச் சாட்டு நிரூபிக்கப்படவில்லை. லீக்டெப்ஸ்டைன் வங்கியில் ரூ.6,500 கோடி கறுப்பு பணம் மதிப்பிடப்பட்டிருப்பதாக வும், இது கணக்கில் காட்டப்படாத பணம் என்றும் குறிப்பிட்டார்.

கறுப்பு பணத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ராம் ஜெத்மலானி கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக அருண்ஜேட்லி இதனைக் கூறினார்.

அரசு எந்த தவறான வாக் குறுதிகளையும் அளிக்கவில்லை, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை கொண்டுவர முயற்சி களையும் தொடர்ச்சியாக மேற் கொண்டு வருகிறோம். புதிய சட்டங்களும் கொண்டுவரப்பட்டுள் ளன என்றார்.

மேலும் பனாமா பேப்பர் விவகாரத்தில் தொடர்புடை யவர்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

ஜெர்மனி அரசு கறுப்பு பணம் பதுக்கியுள்ளவர்களின் கணக்கை தர தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பட்டியலை வெளியிட அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று ராம் ஜெத்மலானி கேள்வி எழுப்பினார்.

கறுப்பு பணம் தொடர்பான தகவல்களை இலவசமாக பகிர்ந்து கொள்ள ஜி-20 நாடுகள், ஸ்விட்சர்லாந்து அரசு உள்ளிட்டவற்றுடன் ஒப்பந்தங்கள் மேற்கொண்டது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்துள் ளோம் என்று ஜேட்லி கூறினார்.

SCROLL FOR NEXT