வணிகம்

தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 107 கோடி: தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தகவல்

பிடிஐ

இந்தியாவில் தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்களின் எண் ணிக்கை 107 கோடியை தொட்டுள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) புள்ளிவிவரங்கள்படி இது தெரிய வந்துள்ளது. 2016 செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 107.42 கோடியாக உள்ளது. அதற்கு முந் தைய காலாண்டான ஜூன் மாதத்தில் 105.98 கோடி வாடிக்கையாளர்கள் இருந்துள்ளனர். காலாண்டு அள வில் 1.36 சதவீதம் வாடிக்கை யாளர்கள் அதிகரித்துள்ளனர். கடந்த ஆண்டின் செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது வாடிக்கையாளர்களின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 5.05 சதவீதமாக உள்ளது.

’இந்திய தொலைத் தொடர்பு சேவை செயல்பாடுகள் ஜூலை செப்டம்பர் .2016’ என்கிற சமீபத்திய அறிக்கையில் டிராய் இந்த விவரங்களை குறிப்பிட்டுள்ளது. செப்டம்பர் காலாண்டில் நகர்ப்புற வாடிக்கையாளர்கள் 62.43 கோடி அதிகரித்துள்ளனர். ஆனால் கிராமப் புற வாடிக்கையாளர்கள் 45.04 கோடியிலிருந்து 44.98 கோடியாக குறைந்துள்ளனர். ஆனால் மொத்த மாக 1.46 கோடி வாடிக்கையாளர்கள் ஜூன் செப்டம்பர் காலாண்டில் அதிகரித்துள்ளனர்.

செப்டம்பர் மாத முடிவில் கம் பில்லா இணைப்பு தொலை தொடர்பு (ஜிஎஸ்எம், சிடிஎம்ஏ) வாடிக்கையாளர்களின் எண் ணிக்கை 104.97 கோடியாக அதிகரித் துள்ளது. இதன் காலாண்டு வளர்ச்சி 1.41 சதவீதமாகவும், ஆண்டு வளர்ச்சி வீதம் 5.33 சதவீதமாகவும் உள்ளது.

அதேசமயத்தில் கம்பி இணைப்பு தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண் ணிக்கை சரிந்து வருகிறது. 2016 ஜூன் காலாண்டு முடிவில் 2.57 கோடி யாக இருந்த எண்ணிக்கை செப்டம் பர் காலாண்டு முடிவில் 2.44 கோடி யாக உள்ளது. இந்த காலாண்டில் மட்டும் 1 சதவீதம் சரிந்துள்ளது. ஜூன் காலாண்டுபடி ஆண்டு சரிவு வீதம் 5.62 சதவீதமாக உள்ளது.

செப்டம்பரில் இண்டர்நெட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 36.74 கோடியாக அதிகரித்துள்ளது. காலாண்டு காலத்தில் மட்டும் 4.85 சதவீத வாடிக்கை யாளர்கள் அதிகரித்துள்ளனர். இதில் கம்பி இணைப்பு வழியாக 2.12 கோடி வாடிக்கையாளர்களும், கம்பியில்லா இணைப்பு வழியாக 34.62 கோடி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.

டிராய் புள்ளிவிவரங்கள்படி தொலைதொடர்பு சேவைத்துறையின் மொத்த வருமானம் செப்டம்பர் காலாண்டில் ரூ.71,379 கோடியாக உள்ளது. அதற்கு முந்தைய காலாண்டில் ரூ.50,539 கோடியாக இருந்தது.

SCROLL FOR NEXT