வணிகம்

வாகன விற்பனையில் ஹீரோவை முந்தியது டிவிஎஸ்

செய்திப்பிரிவு

வாகன விற்பனையில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சென்னையை சேர்ந்த டிவிஎஸ் இரண்டாம் இடத்துக்கு உயர்ந்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் டிவிஎஸ் நிறுவனம் 7,43,838 வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தை விட 5.07 சதவீதம் அதிகமாகும்.

ஆனால் ஹீரோ மோட்டோ கார்ப் இதே காலத்தில் 7,19,987 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தை விட விற்பனை 1.64 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 7,31,967 வாகனங்களை ஹீரோ விற்பனை செய்திருந்தது.

முதல் இடத்தில் ஹோண்டா நிறுவனம் இருக்கிறது. இந்த நிறு வனம் 29,34,794 வாகனங்களைக் கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை விற்பனை செய்திருக்கிறது. முந்தைய ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 15.32 சதவீதம் அதிகமாகும்.

நான்காவது இடத்தில் யமாஹாவும், ஐந்தாவது இடத்தில் சுசூகியும் உள்ளன. ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை 3,95,704 வாகனங்களை யமாஹா விற்பனை செய்துள்ளது. இதே காலத்தில் 2,51,504 வாகனங்களை சுசூகி விற்பனை செய் துள்ளது.

கடந்த பிப்ரவரியில் அதிகம் விற்பனையான வாகனமாக ஹோண்டா நிறுவனத்தின் ஆக்விடா இருக்கிறது. இந்த வாகனம் 2.17 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து டிவிஎஸ் ஜூபிடர் 51,817 வாகனங்களும், ஹீரோ மேஸ்ட்ரோ 32,421 வாகனங்களும் விற்பனையாகியுள்ளன.

SCROLL FOR NEXT