யஸுங்கா (Kyazoonga) என்னும் இ-டிக்கெட் நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு செய்திருக்கிறார். ரத்தன் டாடா எவ்வளவு தொகையை முதலீடு செய்தார் என்பதை நிறுவனம் குறிப்பிடவில்லை. அதேபோல இதுவரை மொத்தமாக எவ்வளவு தொகையை திரட்டி இருக்கிறது என்பது குறித்த தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா கடந்த இரு வருடங்களில் 25-க்கும் மேற் பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார். ஸ்நாப்டீல், பேடிஎம், ஓலா உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார்.
எங்கள் நிறுவனத்தை அடுத்தகட் டத்துக்கு எடுத்து செல்லும் முயற்சி யில் ரத்தன் டாடா இணைந்தி ருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று யஸுங்கா நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி நீது பாட்டியா தெரிவித்தார்.
சர்வதேச நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகளுக்கான டிக்கெட்களை ஆன்லைன் மூலம் இந்த நிறுவனம் விற்கிறது. ஐசிசி உலககோப்பை, பிஃபா உலகக் கோப்பை தகுதி ஆட்டங்கள், இந்தியன் பிரீமியர் லீக், புரோ கபாடி லீக், நேரு கோப்பை ஆகிய போட்டிகளுக்கான டிக்கெட்களை இந்த நிறுவனம் விற்கிறது.
இந்தியாவை தவிர, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.