வணிகம்

லாய்ட் கன்ஸ்யூமர் டியூரபிளை ரூ.1,600 கோடிக்கு வாங்குகிறது ஹெவல்ஸ்

செய்திப்பிரிவு

மின்சாதன பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனமான ஹெவல்ஸ், லாய்ட் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் கன்ஸ்யூமர் டியூர பிள் பிரிவை ரூ.1,600 கோடிக்கு வாங்க முடிவெடுத்திருக்கிறது.

ஹெவல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு இதற்கான ஒப்பு தலை வழங்கியது. இந்த இணைப்பின் மூலம் கன்ஸ்யூமர் டியூரபிள் (வீட்டு உபயோக பொருட்கள்) பிரிவில் ஹெவல்ஸ் களம் இறங்குகிறது. லாய்ட் நிறுவனத்தின் டிவி, ஏசி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களைத் தயாரிப்பது, விநியோகம், மார் கெட்டிங் அனைத்தும் ஹெவல்ஸ் வசம் வரும். தவிர இந்த பிரிவின் கட்டுமானம், மனிதவளம், பிராண்ட், லோகோ உள்ளிட்ட அனைத்தும் ஹெவல்ஸ் நிறுவனத்துக்கு கிடைக்கும்.

நகரமயமாக்கல், நடுத்தர மக்களின் வாழ்க்கை முறை ஆகிய காரணங்களால் இந்த துறை ஒவ்வொரு ஆண்டும் இரட்டை இலக்க வளர்ச்சி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT