ஹெச்ஐவி-யைத் தடுக்கும் வகையில் புதிய மருந்துகளைக் கண்டறிவதற்கு 14 கோடி டாலரை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸின் அறக்கட்டளை வழங்கியுள்ளது.
தி பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை புதிய தொழில்நுட்பத்தில் ஹெச்ஐவி நோயை தடுக்கும் மருந்துகளை கண்டறிவதற்கு நிதியுதவி அளித் துள்ளது. தற்போதைய சூழலில் ஹெச்ஐவிக்கான மருந்துகள் மாத் திரை வடிவில் உள்ளன. இந்த மாத்திரைகளை தினந்தோறும் எடுத்து வந்தால் ஹெச்ஐவி ஏற் படும் வாய்ப்பு குறைவாக இருக் கும். இந்த மருந்துகளை உலக சுகாதார மையம் பரிந்துரைத் துள்ளது. இந்த மருந்துகளை தொடர்ந்து எடுத்து வந்தால் மட்டுமே பயன் இருக்கும்.
ஆனால் ஹெச்ஐவி நோய் ஏற்படாமல் முழுவதும் தடுக்க புதிய தொழில்நுட்பத்திலான மருந்தை கண்டறிய பில்கேட்ஸ் அறக்கட்டளை முயற்சி எடுத்து வருகிறது. இதையொட்டி பாஸ் டனை மையமாக கொண்டு இயங் கும் பயோ பார்மச்சூடிகல்ஸ் நிறுவனத்தில் இந்த புதிய முதலீட்டை பில்கேட்ஸ் அறக்கட்டளை செய் துள்ளது. இந்த நிறுவனம் புதிய தொழில்நுட்பத்திலான ஹெச்ஐவி மருந்தை நிச்சயம் கண்டறியும் என்று பில் கேட்ஸ் அறக்கட்டளை நம்புகிறது.