வணிகம்

டிசிஎஸ் நிகர லாபம் 10.9 சதவீதம் உயர்வு

செய்திப்பிரிவு

இந்தியாவின் மிகப்பெரிய மென் பொருள் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 10.9 சதவீதம் உயர்ந்து ரூ.6,778 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் நிகர லாபம் ரூ.6,110 கோடியாக இருந்தது. டிஜிட்டல் சேவைகள் மூலம் நல்ல வருமானம் வந்திருப்பதால் சந்தை எதிர்பார்ப்புகளை தாண்டியும் நிகர லாபம் உயர்ந்திருக்கிறது. முதல் முறையாக 100 கோடி டாலர் நிகர லாபத்தை நிறுவனம் அடைந்திருக்கிறது.

நிறுவனத்தின் வருமானம் 8.7 சதவீதம் உயர்ந்து ரூ.29,735 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.27,364 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. முந்தைய செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது நிகர லாபம் 2.9 சதவீதமும், வருமானம் 1.5 சதவீதமும் உயர்ந்திருக்கிறது.

பொதுவாக மூன்றாம் காலாண்டு மந்தமாக இருப்பது வழக்கம். ஆனால் எங்களுடைய பிஸினஸ் மாடல் காரணமாக சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம். டிஜிட்டல் சேவைகள், கிளவுட், மற் றும் எங்கள் வாடிக்கையாளர் களை புரிந்துகொண்டது ஆகிய காரணங்களால் எங்களின் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக என்.சந்திரசேகரன் தெரிவித்தார். ஆண்டுக்காண்டு டிஜிட்டல் பிரிவு 30 சதவீதம் அளவுக்கு வளர்ந்து வருகிறது.

ஒரு பங்குக்கு 6.5 ரூபாய் டிவிடெண்ட் வழங்க நிறுவனம் முடி வெடுத்திருக்கிறது. நிறுவனத்தின் வெளியேறுவோர் விகிதம் 11.3 சதவீதமாக இருக்கிறது. மொத்த பணியாளர்களின் எண் ணிக்கை இதுவரை இல்லாத அளவு உயர்ந்திருக்கிறது. 34.6 சத வீதம் பெண் பணியாளர்கள் இருக் கின்றனர். டிசம்பர் காலாண்டு முடி வில் பணியாளர்களின் எண் னிக்கை 3,78,497 ஆக இருக்கிறது.

முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது லத்தீன் அமெரிக்கா மற்றும் இந்தியாவிலி ருந்து கிடைக்கும் வருமானம் இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்திருக்கிறது. மாறாக வட அமெரிக்கா பகுதியில் 2.2 சதவீத வளர்ச்சியும், இங்கிலாந்தில் 1.7 சதவீத வளர்ச்சியும் டிசிஎஸ் அடைந்திருக்கிறது.

இந்த காலாண்டில் 5 கோடி டாலர் வருமானம் கொடுக்கும் இரு வாடிக்கையாளரையும், 1 கோடி டாலர் வருமானம் கொடுக்கும் ஐந்து வாடிக்கையாளரையும் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

நேற்றைய வர்த்தக முடிவில் 0.86 சதவீதம் உயர்ந்து 2,344.35 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.

SCROLL FOR NEXT