வணிகம்

விவசாயக் கடன் தள்ளுபடியால் ரூ.27,420 கோடி பாதிப்பு

பிடிஐ

உத்தரப் பிரதேசத்தில் பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் முக்கியமானது விவசாயக் கடன் தள்ளுபடியாகும். பெரும் பான்மையான இடங்களைப் பிடித்து ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக, விவசாயக் கடன் தள்ளு படி நடவடிக்கையை எடுத்தால் அதனால் வங்கிகளுக்கு ரூ. 27,420 கோடி பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது. இது மாநில நிதி நிலையை கடுமையாக பாதிக்கும் என்று எஸ்பிஐ வெளியிட்ட அறிக்கை எச்சரித்துள்ளது.

எஸ்பிஐ ஆய்வறிக்கை விவரம் வருமாறு: உத்தரப் பிரதேசத்தில் வங்கிகள் அளித்துள்ள விவசாயக் கடன் தொகை ரூ.86,241 கோடியா கும். இதில் ஒரு விவசாயிக்கு சராசரியாக 1.34 லட்சம் வழங்கப் பட்டுள்ளது. இதில் பெரும் பாலானவர்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளாவர். ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி வங்கிகளின் மொத்த கடன் வழங்கு அளவில் 31 சதவீதம் வேளாண் துறைக்கு வழங்க வேண்டும் என்பதாகும். இதில் 2.5 ஏக்கருக்கும் குறைவான நிலப் பகுதியை உடைய விவசாயிகள் சிறு மற்றும் குறு விவசாயிகளாகக் கருதப்படுவர்.

சிறு மற்றும் குறு விவசாயி களுக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.27,419.70 கோடி தள்ளுபடி செய்யப்பட வேண்டும். 2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமூக பொருளாதார மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பின்படி 40% பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் சிறு, குறு விவசாயிகளின் எண்ணிக்கை 92 சதவீதமாகும்.

2016-17-ம் ஆண்டு நிலவரப்படி உபி மாநிலத்தின் மொத்த வருவாய் ரூ.3,40,255.24 கோடியாகும். இதில் ரூ. 27,419.70 கோடி ரத்து செய்யப்பட்டால் அது மொத்த வருவாயில் 8 சதவீதமாகும். இது மாநில பட்ஜெட் வருவாயில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

SCROLL FOR NEXT