மத்திய அரசு அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்த உள்ள சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறைக்காக மாநிலங்களுக்கு இடையே அமைந்துள்ள 80 சோதனைச் சாவடிகள் நவீன மயமாக்கப்பட உள்ளன. இதற்கு ரூ. 4 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப் பட்டுள்ளது. இத்தகவலை மத்திய தரைவழி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
இந்த சோதனைச் சாவடிகள் அனைத்தும் ஒரு செயலி (ஆப்) மூலம் ஒருங்கிணைக்கப்படும்.
வரி விதிப்பில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவதாக ஜிஎஸ்டி அமையும். இதனால் மாநி லங்களின் எல்லைகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் மத்திய அரசு சோதனைச் சாவடிகள் அனைத்தும் இணைக் கப்படும்.
ஜிஎஸ்டி அமலுக்கு வரும் போது மாநிலங்களிடையே சரக்கு போக்குவரத்து எவ்வித இடையூ றுமின்றி நடைபெற சோதனைச் சாவடிகளின் செயல்பாடு மிகவும் பரந்து பட்டதாக இருக்க வேண்டியது அவசிய மாகிறது. அதற்கான நடவடிக் கைகளை தனது அமைச்சகம் எடுத்து வருவதாக கட்கரி கூறினார்.