இந்த ஆண்டு தாக்கல் செய்ய உள்ள பொது பட்ஜெட்டில் ரயில் வேத் துறையில் உள்ள போர்டர் களுக்கு (கூலி) சமூக பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஒரு டிக்கெட் டுக்கு 10 காசு கூடுதலாக வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும் என தெரிகிறது.
பெங்களூருவில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவைச் சந் தித்துப் பேசியபோது ஐஎன்டியுசி துணைத் தலைவர் அசோக் சிங் இந்த பரிந்துரையை அளித் துள்ளார். செஸ் எனப்படும் வரி விதிப்பு மூலம் ஒரு டிக்கெட்டுக்கு 10 காசு கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 4.38 கோடி வசூலாகும் என மதிப்பிடப்பட் டுள்ளது. இதில் 58 சதவீத டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுபவையாகும்.
நாளொன்றுக்கு 10 லட்சம் முதல் 12 லட்சம் பயணிகள் டிக்கெட் விற்பனையாகிறது. 10 காசுகளை கூடுதலாக வசூலிப்பதன் மூலம் தினசரி ரூ. 1.20 லட்சம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ரயில்வேத் துறையில் 20 ஆயிரம் போர்டர்கள் எனப்படும் சுமை தூக்கும் கூலித் தொழிலாளிகள் உள்ளனர். இவர்களுக்கு இபிஎப், இஎஸ்ஐ மருத்துவ வசதி உள்ளிட்ட நலத் திட்டங்களை அளிப்பதற்கு இந்தத் தொகை போதுமானதாக இருக்கும். ரயில்வே பட்ஜெட்டுக் கென வரும் நிதி ஆண்டிலிருந்து தனி பட்ஜெட் கிடையாது. பொது பட்ஜெட்டுடன் ரயில்வேத் துறைக் கான நிதி ஒதுக்கீடு அளிக்கப்படும். இதனால் ரயில்வே போர்டர்களுக்கு உதவும் வகையில் இதை பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பார் என்று தெரிகிறது.