முன்னணி எப்எம்சிஜி நிறுவனமான ஐடிசி ரூ.4,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்திய அளவில் உணவு பொருள் தயாரிக்கும் வித மாக 8-9 ஆலைகளை அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டு களுக்குள் அமைக்க உள்ளதாக ஐடிசி புட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வி.எல்.ராஜேஷ் குறிப்பிட்டார்.
ஐடிசியின் அடைக்கப்பட்ட உணவுகள் வளர்ச்சி 11% என்கிற அளவை எட்டியுள்ளது. 2015-16 நிதி யாண்டில் ரூ.7,097 கோடி பரிவர்த் தனை செய்துள்ளது என்று குறிப் பிட்டார். ஐடிசி நிறுவனத்துக்கு இரண்டாவது மிகப்பெரிய தொழி லாக உணவுப் பொருட்கள் துறை உள்ளது.
உடல்நலத்தில் அக்கறை செலுத் தும் நுகர்வோர்களுக்காக சமீபத் தில் புதிய பிஸ்கெட் வகைகளை யும் நிறுவனம் அறிமுகப்படுத்தி யுள்ளது. பிஸ்கெட் துறையில் உடல் நலம் சார்ந்த பிஸ்கெட்டுகள் தற் போது 1 சதவீத சந்தையை கொண் டுள்ளன. இந்த பிரிவின் வளர்ச் சிக்கு ஏற்ப மிகப்பெரிய சந்தையை உருவாக்குவோம் என்று ராஜேஷ் குறிப்பிட்டார்.