சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கான தேசிய அளவில் ஒருங்கிணைந்த கொள்கை விரைவில் உருவாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்தார்.
இதுநாள் வரையில் தேசிய அளவிலான எம்.எஸ்.எம்.இ கொள்கை இல்லை. இதனை அமைப்பதற்காக மத்திய அமைச்சரவையின் முன்னாள் செயலாளர் பிரபாத் குமார் தலைமையிலான ஒரு நபர் குழு மத்திய அமைசர் கல்ராஜ் மிஸ்ராவிடம் தன்னுடைய பரிந்துரைகளை அளித்தது. இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறியதாவது: குழு தன்னுடைய பரிந்துரையை வழங்கி இருக்கிறது. இதர அமைச்சகங்களுடன் இணைந்து அந்த பரிந்துரைகளை நாங்கள் பரிசீலனை செய்துவருகிறோம். இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்தவர்களின் கருத்து கேட்கப்படும் என்றார்.