வணிகம்

டாடாவுடனான கூட்டணி: வெளியேற டோகோமோ முடிவு

செய்திப்பிரிவு

டாடா நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு பங்குகளை விற்றுவிட்டு வெளியேற ஜப்பானின் டோகோமோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

2009-ம் ஆண்டு டாடா குழுமத்துடன் இணைந்து ஜிஎஸ்எம் சேவையை டோகோமோ வழங்கி வருகிறது. ஜப்பானின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான டோகோமோ என்டிடி நிறுவனம் கூட்டு நிறுவனத்தில் 26 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இதற்காக அந்நிறுவனம் 261 கோடி டாலர் முதலீடு செய்திருந்தது. டோகோமோ நிறுவனத்துக்கு இந்த கூட்டணி லாபகரமானதாக அமையவில்லை. இதனால் வெளியேற முடிவு செய்துள்ளது.

டோகோமோ விற்பனை செய்யும் 26 சதவீத பங்குகளை டாடா நிறுவனமே வாங்கிக் கொள்ளும் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT