துணிச்சல் உள்ளவர்கள் மட்டுமே ஏர் இந்தியாவை வாங்கும் முடி வினை மேற்கொள்வார்கள் என்று மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தி யாவை தனியார்மயமாக்குவது என்கிற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. நிறுவனத்துக்கு உள்ள கடன் சுமை காரணமாக இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் கூறியுள்ள ஆனந்த மஹிந்திரா ஏர் இந்தியாவை வாங்கும் அளவுக்கு தனக்கு துணிச்சல் இல்லை என்று கூறியுள்ளார்.
ஏர் இந்தியாவின் ரூ.52 ஆயிரம் கோடி கடன் காரணமாக புதன்கிழமை மத்திய அமைச்சரவை இந்த முடிவினை எடுத்துள்ளது. ஆனால் இதில் இன்னும் தெளிவான முடிவு எட்டப்படவில்லை என்றே தெரிகிறது. முக்கியமாக கடன்களில் ஒரு பகுதியை அரசு தள்ளுபடி செய்யுமா என்பது குறித்து முடிவு எட்டப்படவில்லை. ஆனால் ஏர் இந்தியா விற்பனை குறித்து அறிவிக்கப்பட்ட பிறகு தொழில் துறையினர் ஆர்வமுடன் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரி வித்துள்ள ஆனந்த் மஹிந்திரா, இவ்வளவு கடினமான கையகப் படுத்தலை யார் மேற்கொள்வார்கள் என கேட்டுள்ளார். மேலும் நான் இயல்பாகவே துணிச்சலான முடிவு களை மேற்கொள்வேன், ஆனால் இந்த விஷயத்தில் தனக்கு அந்த அளவுக்கு துணிச்சல் இல்லை என்பதை ஒப்புக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கும் பல புதிய நிறுவனங்கள் வந்த பிறகு ஏர் இந்தியாவின் சந்தை குறையத் தொடங்கியது குறிப்பிடத் தக்கது. விமானங்கள் தாமதம், திடீரென ரத்து செய்வது போன்ற காரணங்களால் பயணிகள் குறைந்த விலை விமான சேவைகளை நாடத் தொடங்கியதால் ஏர் இந்தியா சந்தை குறைந்தது.
இது தொடர்பாக டாடா நிறு வனம் இதுவரையில் கருத்து தெரி விக்கவில்லை. பார்தி எண்டர் பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் சமீபத்தில் கூறுகை யில், ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் சிறப்பாக செயல்பட வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். சமூக வலைதளங்களில் ஏர் இந்தியாவை விற்கும் முடிவு தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.