பயன்படுத்தப் படாத நிலையில் உள்ள விமான நிலையங்களை சிறப்பு பொருளாதார மண்டலங் களாக (எஸ்இஇஸட்) மாற்ற மத்திய அரசு யோசித்து வரு கிறது. விமானங்களை நிறுத்தி வைத்துக் கொள்ள குத்தகைக்கு விடவும், பணக்கார வாடிக்கை யாளர்கள் தங்களது விமானங் களை பாதுகாக்கவும், இந்த விமான நிலையங்களை மாற்ற மத்திய அரசு யோசித்து வருவதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு விமான சேவை துறையை ஊக்குவிக்கும் நீண்ட கால திட்டங்களின் ஒரு பகுதியாக, குத்தகை விமானங்களின் செலவு களை குறைக்கும் வழியாக இருக்கும் இது இருக்கும் என்று விமான போக்குவரத்து துறை செயலாளர் ஆர். என். செளபே தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கிட்டத் தட்ட 400 பயன்படுத்தப்படாத விமான நிலையங்கள் மற்றும் விமான தளங்கள் உள்ளன. இந்த விமான நிலையங்களை பயன்படுத்தும் வழிகளை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது. குறிப்பாக விமானங்களை நிறுத்தி வைக்கவும், பழைய விமானங் களை உடைக்கவும், பிரித்தெடுக் கும் பணிகளுக்கும் பயன்படுத்த வும் யோசித்து வருகிறது.
இதற்கான சாத்தியமான வழி முறைகளை ஆராய்ந்த பிறகு முடிவை அறிவிப்போம். இவற்றை சிறப்பு பொருளாதார மண்டலங் களாக அறிவித்தால் இரண்டு வழிக ளில் இவற்றை பயன்படுத்த அனு மதிக்கப்படும். முதலாவதாக இவற்றை விமான நிறுவனங் களுக்கு குத்தகைக்கு அளித் தால் சர்வதேச அளவில் விமானங் கள் இங்கு நிறுத்தம் செய்வ தற்கு வருவார்கள். இரண்டாவ தாக கப்பல் பிரித்தெடுக்கும் துறை யில் இந்தியா சிறப்பான இடத்தில் உள்ளதுபோல, இந்த விமான நிலையங்களை பயன்படுத்த லாம் என்று செளபே கூறினார்.
இந்திய விமான துறை நிலையான வளர்ச்சியில் உள்ளது. இந்த வளர்ச்சியை தக்க வைப்பதற் கான முயற்சிகள்தான் இப்போது தேவை என்றும் கூறினார்.
உள்ளூர் அளவிலான போக்குவரத்து குறித்து பேசிய செளபே, கச்சா எண்ணெய் விலை அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளுக்கு சாதகமான நிலையிலேயே இருந் தால் உள்ளூர் அளவிலான போக்கு வரத்து தடங்கள் உறுதியான இடத் தில் இருக்கும் என்றும் கூறினார். மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் விமான போக்குவரத்து துறை 20 சதவீத வளர்ச்சியை எட்டும் என்றும் குறிப்பிட்டார்.
புதிய விமான போக்குவரத்து கொள்கை ஜூன் 15 ஆம் தேதி வெளி யிடப்பட்டது. இதில் குறுகிய தூர சேவைகளை அதிகரிப்பதற் கான புதிய வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.