வணிகம்

பிஎஸ்-III தடை: கனரக வாகன உற்பத்தியாளர்களுக்கு ரூ.2,500 கோடி இழப்பு

பிடிஐ

வர்த்தக வாகனங்களைத் தயாரிக் கும் ஆட்டோமொபைல் நிறுவனங் களுக்கு பிஎஸ்-III தடை காரணமாக ரூ. 2,500 கோடி இழப்பு ஏற்படும் என்று தரச்சான்று நிறுவனமான கிரிசில் தெரிவித்துள்ளது.

பிஎஸ்-III புகை சோதனைக் குள்பட்ட வாகனங்களை ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து தயாரிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல இந்த வாகனங்கள் விற்பனை மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கப்பட மாட்டாது என தெரிவித்தது.

இதனால் மார்ச் 31-ம் தேதி வரை கடைசி 2 நாள்களுக்கு அதிக தள்ளுபடி விலையில் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதனால் நிறுவனங்களுக்கு ஏற் பட்ட இழப்பு ரூ. 1,200 கோடியாகும். இது தவிர இந்நிறுவனங்களிடம் விற்பனையாகாமல் தேங்கியுள்ள வாகனங்களை பிஎஸ் IV நிலைக்கு உயர்த்த ரூ.1,300 கோடி செல வாகும். பங்குச் சந்தையில் பட்டிய லிட்டுள்ள கன ரக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களான அசோக் லேலண்ட், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் மொத்த வருவாயில் 2.5 சதவீத இழப்பு ஏற்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இழப்பு 2017 மற்றும் 2018 நிதி ஆண்டில் தொடரும் என்றும் விநியோகஸ்தர்களிடம் தேங்கியுள்ள பிஎஸ் III வாகனங் களைத் திரும்ப ஆலைகளுக்குக் கொண்டு வந்து அதில் மாற்றம் செய்யும் நடவடிக்கையை பின்னர்தான் இந்நிறுவனங்கள் எடுக்கும்.

கடந்த நிதி ஆண்டு இறுதி வரை இந்நிறுவனங்கள் பிஎஸ் III வாகனங்களைத் தயாரித்தன. மேலும் இவற்றுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்ததால் இவை உற்பத்தி செய்யப்பட்டன. மேலும் பிஎஸ் IV வாகனங்களின் விலை 10 சதவீதம் வரை அதிகமிருக்கலாம் என்பதால் வாடிக்கையாளர்கள் நிதி ஆண்டு இறுதியில் அதிக எண்ணிக்கையில் பிஎஸ் III வாகனங்களை வாங்கியதாக அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் ஏப்ரல் மாதத்திலிருந்து பிஎஸ் IV வாகனங்கள் உற்பத்தி செய்வதைக் கட்டாயமாக்கினாலும், ஏப்ரல் மாதம் வரை பிஎஸ் III வாகனங்களை விற்பனை செய்ய நீதிமன்றம் கால அவகாசம் அளிக்கும் என இந்நிறுவனங்கள் எதிர்பார்த்தன.

வாகனங்களுக்கு மார்ச் மாத இறுதியில் அளிக்கப்பட்ட தள்ளு படி விலையில் 80 சதவீதத்தை நிறுவனங்கள் ஏற்றுக் கொண் டுள்ளன. 20 சதவீதத்தை விநி யோகஸ்தர்கள் ஏற்றுக் கொண்ட தாகத் தெரிவிக்கப்படுகிறது.

விற்பனையாகாமல் தேங்கி யுள்ள 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையான பிஎஸ் III வாகனங்களில் மாற்றம் செய்ய ரூ. 1,300 கோடி தேவைப்படும்.

ஒவ்வொரு வாகனத்திலும் மாற் றம் செய்ய குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் செலவிட வேண்டியிருக்கும்.

SCROLL FOR NEXT