பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்ட மொத்தவிலை குறியீடு உயர்ந்துள்ளது. மேலும் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. மொத்தவிலை சந்தையில் உருளைக்கிழங்கின் விலை 60 சதவீதம் உயர்ந்துள்ளது. பருப்பு வகைகள் கடந்த ஆண்டை விட 36 சதவீதம் விலை உயர்ந் துள்ளது.
இந்தியாவின் ஆண்டு மொத்த விலை பணவீக்கம் இரண்டா வது மாதமாக மே மாதத்தில் அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 0.34 சதவீதமாக இருந்த மொத்த பணவீக்கம் மே மாதத்தில் 0.79 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பணவீக்கத்தை அடிப்படை யாகக் கொண்ட மொத்தவிலை குறியீடுகளை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்ச கம் வெளியிடுகிறது. மே மாதத் திற்கான புள்ளிவிவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன.
இந்த புள்ளிவிவரங்கள்படி உணவு பொருட்களின் ஆண்டு விலை உயர்வு மே மாதத்தில் 7.88 சதவீதம் அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய மாதத்தில் 4.23 சதவீதமாக இருந்தது. மேலும் இரண்டு மாதங்களில் 4.47 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த புள்ளிவிவரங்கள் படி ஆண்டு சில்லரை பணவீக்க குறியீடுகளும் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில், 5.47 சதவீத மாக இருந்த சில்லரை பணவீக்க குறியீடு மே மாதத்தில் 5.76 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மேலும் காய்கறிகள், பருப்பு வகைகள், சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரம் மூலம் தெரிய வந்துள்ளது. மொத்த விலை சந்தையில் உருளைக்கிழங்கின் விலை இந்த ஆண்டு மார்ச் - மே இடைப்பட்ட காலத்தில் 38.36 சதவீதம் அதிகரித்துள்ளது. காய் கறிகள் 19.54 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. பருப்பு மற்றும் தானிய வகைகள் 11.34 சதவீத மும், பால் மற்றும் பால் பொருட் கள் 9.39 சதவீதமும் விலை அதிகரித்துள்ளது.
முக்கிய மூன்று துறைகளில் எரிபொருள் துறை குறியீடுகளும் சரிந்துள்ளது. 2015 மே மாதத்தி லிருந்து 2016 மே மாதம் வரையி லான காலத்தில் எரிபொருள் துறை குறியீடு 6.14 சதவீதம் சரிந்துள்ளது. பெட்ரோல் 10.86 சதவீதமும், டீசல் 5.01 சதவீதமும் சரிந்துள்ளது. உற்பத்தி துறை குறியீடும் 0.91 சதவீதமாக சரிந் துள்ளது குறிப்பிடத்தக்கது.