கடந்த மாதம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஏலத்தில் வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கு மே மாதத்தில் ஒதுக்கீடு ஆரம்பமாகும் என தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் 1800 மெகாஹெர்ட்ஸ் அலைக் கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலம் நடைபெற்றது. ஏலம் பெற்ற நிறுவனங்களுக்கான அலைக்கற்றை ஒதுக்கீடு மே மாதம் ஆரம்பமாகும் என்று தொலைத் தொடர்புத்துறைச் செயலர் ஃபரூக்கி தெரிவித்துள்ளார்.
ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலர், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்செல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டெலிவிங்ஸ் (யுனிநார்) ஆகிய நிறுவனங்கள் 1800 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலத்தில் பங்கேற்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக ரூ. 37,520.60 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளன.
இந்நிறுவனங்களில் ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ, ஐடியா ஆகிய நிறுவனங்கள் நான்காம் தலைமுறை (4-ஜி) சேவையை அளிக்கத் திட்டமிட்டுள்ளன. இந்நிறுவனங்கள் இப்போது 2-ஜி சேவையை அளித்து வருகின்றன. இத்தகைய சேவை அளிப் பதால் வாடிக்கையாளர்கள் அதி விரைவான அதாவது 10 முதல் 12 மடங்கு விரைவான இணையதள சேவையைப் பெற முடியும். 3-ஜி சேவையை விட இது அதி விரைவானதாக இருக்கும்.
வோடபோன், ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலர் ஆகிய நிறுவனங்கள் 900 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை கூடுதல் விலையில் பெற்றுள்ளன. இதன் மூலம் செல்போன் சேவையில் இருமடங்கு பரப்பளவை கூடுதலாக அளிக்க முடியும். சில நிறுவனங்கள் 900 மெகாஹெர்ட்ஸ் அலைக் கற்றையைப் பெற்றுள்ளன.
இதில் சில இன்னும் ஏலம் போகவில்லை. அதற்கான ஏலம் நவம்பர் மாதம் நடைபெறும் என்று ஃபரூக்கி மேலும் தெரிவி்ததார்.
வோடபோன், ஏர்டெல் மற்றும் லூப் டெலிகாம் வசம் உள்ள 900 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைக்கான ஒப்பந்த காலம் நவம்பர் மாதத்தில் முடிவடைகிறது. அலைக்கற்றை ஏலம் ரூ. 62,162 கோடிக்கு போனது. அனைத்து நிறுவனங்களும் லைசென்ஸ் கட்டணத்தைச் செலுத்தினால் நடப்பு நிதி ஆண்டில் அரசுக்கு ரூ. 18,296 கோடி கிடைக்கும். அலைக்கற்றை ஏல விதிக ளின்படி 1800 மெகாஹெர்ட்ஸ் ஒதுக்கீட்டுக்கான தொகையில் 33 சதவீதத்தை செலுத்த வேண்டும். இதேபோல 900 மெகாஹெர்ட்ஸுக்கான ஒதுக் கீட்டுத் தொகைக்கு நிறுவனங்கள் 25 சதவீத தொகையைச் செலுத்தியாக வேண்டும்.
எஞ்சிய தொகையை 10 ஆண்டுக்காலத்தில் 2-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து 10 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும்.