பங்குகளை திரும்ப வாங்கும் டிசிஎஸ் நிறுவனத்தின் முடிவுக்கு இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்தையில் வர்த்தகமாகும் டிசிஎஸ் பங்குகளில் 5.6 கோடி பங்குகளை திரும்ப வாங்க இயக்குநர் குழு அனுமதி அளித்துள்ளதாகக் கூறியுள்ளது.
பங்குகளை திரும்ப வாங்க, தற்போதைய சந்தை விலை யிலிருந்து 11 சதவீதம் கூடுத லான விலை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இதன்படி ஒரு பங்கு ரூ.2,850 என்கிற மதிப்பில் திரும்ப வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.16,000 கோடி யாகும்.
பங்குகளை திரும்ப வாங்க செபியின் வழிகாட்டுதல்கள் மற்றும் நிறுவன சட்ட விதிகளுக்கு உட்பட்டு பங்குதாரர்களின் ஒப்பு தலுடன் இந்த முடிவு மேற்கொள்ளப் பட்டுள்ளதாக நிறுவனம் பங்குச் சந்தைக்கு கூறியுள்ளது.