வணிகம்

இவரைத் தெரியுமா?- பெகா ரன்டலா

செய்திப்பிரிவு

நோக்கியா போன் தயாரிப்பு நிறுவனமான ஹெச்எம்டி குளோ பல் நிறுவனத்தின் தலைமை சந்தையிடல் அதிகாரியாக உள்ளார்.

1990-ம் ஆண்டில் நோக்கியா நிறுவனத்தில் ஆப்பிரிக்க ஏற்று மதி மேலாளராக பணிக்குச் சேர்ந்தவர். 17 ஆண்டுகள் நிறுவனத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி யவர்.

நோக்கியா ஐரோப்பிய நாடுகள் மற்றும் உலக அளவிலான சந்தையிடுதல் துறையில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை ஜேஓடி ஆட்டோமேஷன் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர்.

ரோவியோ எண்டெர்டயின்மெண்ட், ஹார்ட்வால் எப்எம்சிஜி ஆகிய நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பு வகித்துள்ளார்.

பின்லாந்தில் உள்ள ஆல்டோ பல்கலைக்கழகத்தின் ஹெல்சிங்கி பொருளாதார பள்ளியில் பட்டம் பெற்றவர்.

SCROLL FOR NEXT