மும்பை பங்குச்சந்தையின் கட்டடங்களில் புகைப்பிடித்தால், ரூ.1000 அவரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிகரெட் துண்டின் காரணமாக, தீ விபத்து ஏற்பட்ட நிகழ்வைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை வளாகம், கட்டடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மும்பை பங்குச்சந்தைக் கட்டடங்களில் உள்ள அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்தத் தடையை மீறி புகைப்பிடித்தால், முதல் முறை சிக்கினால் ரூ.500-ம், தொடர்ந்து தவறு செய்தால் ரூ.1000-ம் அபராதம் விதிக்கப்படும் என்று அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.