வணிகம்

ஐ.நா நிதியத்துக்கு இந்தியா 1 லட்சம் டாலர் பங்களிப்பு

செய்திப்பிரிவு

ஐக்கிய நாடுகள் சபையின் வளரும் நாடுகளுக்கு உதவும் விதமான நிதியத்துக்கு 1 லட்சம் டாலரை இந்தியா வழங்கி இருக்கிறது. இந்த நிதியத்தில் நிதி வழங்கும் முதல் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச வரிச் சிக்கல்களை கையாளும் ஐக்கிய நாடுகள் சபையின் வரிக் கமிட்டிக்கு உதவி செய்யும் விதமாக ஐநா டாக்ஸ் டிரஸ்ட் பண்ட் செயல்படுகிறது. இந்த கமிட்டி 2006-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதற்கான தன்னார்வமான பங்களிப்பை ஐநா கோரியிருந்தது. 2015-ம் ஆண்டில் எத்தியோப்பியாவில் நடைபெற்ற சர்வதேச நிதி மேம்பாட்டு மாநாட்டில் இதற் காக கோரிக்கையை ஐநா வலி யுறுத்தியது என ஐநா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

தற்போதுவரை இந்த கமிட்டிக்கு எந்த நாடுகளும் முதலீடு செய்யவில்லை. முதன்முதலாக இந்தியா 1,00,000 டாலர் முதலீடு செய்துள்ளது. இது ஐநா வரிக் கமிட்டியின் செயல்பாடுகளுக்கு மிகப்பெரிய பங்களிப்பு என குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் பங்களிப்பைத் தொடர்ந்து இதர நாடுகளும் இந்த நிதியத்துக்கு பங்களிப்பை செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது.

SCROLL FOR NEXT