வீடுகளில் இண்டீரியர் எனப்படும் உள் அலங்காரம் செய்ய இன்று நிறைய ஆட்கள் உள்ளனர். அதற்காக நிறுவனங்களும் நிறைய உள்ளன. நல்ல இண்டீரியர்களை எப்படித் தேர்வு செய்வது?
#இண்டீரியர் வேலைச் செய்பவர்கள் நல்ல அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். நிறைய மாடல்களை வைத்திருக்க வேண்டும்.
#எப்படிப்பட்ட வீட்டிலும் இடத்தை அழகாகக் காட்டக்கூடிய வேலைகள் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
#இண்டீரியர் வேலைக்கு எப்போதும் பட்ஜெட் அதிகம். வீட்டுக்கு எவ்வளவு பட்ஜெட் ஆகும் என்பதைத் துல்லியமாகத் தெரிவிக்கும் அளவுக்கு ஞானம் உள்ளவராக இருக்க வேண்டும். முதலில் ஒரு லட்சம் ரூபாய் என்று சொல்லி விட்டு, பிறகு கூடுதல் செலவானால், பணம் தயார் செய்வதில் நமக்குப் பிரச்சினை ஏற்படலாம்.
#வீட்டுக்கு என்ன வேலைச் செய்யவேண்டும், எப்படிச் செய்தால் வசதியாக இருக்கும், அழகா இருக்க என்னவெல்லாம் செய்யலாம் என நிறைய ஐடியாக்கள் வைத்திருக்க வேண்டும். #இண்டீரியர்கள் நம் ரசனைக்கும், நாம் எதிர்பார்க்கும் தரத்தையும் நிறைவேற்றுபவராக இருக்க வேண்டும். #நல்ல இண்டீரியர்களைத் தேர்வு செய்வதுடன் நம் வேலை முடிந்தது என்று இருக்கக்கூடாது. கூடவே இருந்து, வேலை வேலையாட்களை நன்றாக வேலை வாங்க வேண்டும்.