வணிகம்

உள்கட்டமைப்பு திட்டங்களில் கால தாமதம்: ரூ.1.59 லட்சம் கோடி கூடுதல் செலவு

பிடிஐ

உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் கால தாமதத்தால் திட்டச் செலவு ரூ.1.6 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இந்திய அளவில் 241 உள் கட்டமைப் பு திட்டங்களை நடை முறைப்படுத் துவது நிலம் கையகப்படுத்தல், வனத்துறை அனுமதி மற்றும் பல காரணங்களால் தாமதமாகின்றன என்றும், இதனால் இதற்கான திட்ட மதிப்பிலிருந்து செலவுகள் ரூ.1.59 லட்சம் கோடி அதிகரித்துள்ளது என்று அரசு வெளியிட்டுள்ள புள் ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய புள்ளி விவரத்துறை அமைச்சகம் மே மாதம் மேற்கொண்ட ஆய்வின்படி இது தெரிய வந்துள்ளது. தலா ரூ.150 கோடி மதிப்பிலான மின்சாரம், சாலை மற்றும் ரயில்வே உள்ளிட்ட துறைகளில் 1,076 உள் கட்டமைப்பு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த 1076 திட்டங்களில் 4 திட்டங்கள் மட்டுமே திட்டமிட்ட காலத்தை விட முன்கூட்டியே முடிவடையும் நிலையில் உள்ளன. 252 திட்டப் பணிகள் உரிய காலத்தில் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. 330 திட்டங்கள் தாமதம் ஆகும் என்றும், 241 திட்டங்களின் செலவுகள் திட்ட மதிப்பீட்டை விட அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் 70 உள் கட்டமைப்புத் திட்டங்களை நடை முறைப்படுத்துவதில் காலதாமத மும் செலவும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

2016 மே மாத திட்ட கண்காணிப்பு அறிக்கைபடி 1076 உள்கட் டமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமிட்ட செலவு ரூ.12,69,688.04 கோடியா கும். ஆனால் இந்த திட்டங்களை முடிக்க எதிர்பார்க்கப் படும் செலவு ரூ.14,28,703.39 கோடியாக இருக் கும். திட்டத்தின் உண்மையான மதிப்பீட்டை விட செலவினங்கள் 1,59,015.35 கோடி அதிகரிக்கும் என்று அந்த அறிக்கை குறிப்பிட் டுள்ளது. இது திட்டங்களின் உண்மையான மதிப்பில் 12.52 சதவீதம் அதிக மாகும். 2016 மே வரை இந்த திட்டங் களுக்கு 5,75,248.27 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது எதிர் பார்க்கப்படும் திட்ட செலவில் 40.26 சதவீதமாகும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

மேலும் திட்டங்கள் தாமதமா கும் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் அந்த அறிக்கை குறிப்பிட் டுள்ளது. சமீபத்தில் முடிந்த திட் டங்களில் அடிப்படையில் இந்த தாமதம் கணக்கிடப்பட்டுள்ளது. 41 திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவை எந்த தேதியில் செயல்பாட்டுக்கு வரும் என்ற விவரம் தெரிவிக்கப் படவில்லை.

தாமதமாகும் 330 திட்டங்களில், 63 திட்டங்களின் தாமத காலம் 1 முதல் 12 மாதங்களாக உள்ளது. 59 திட்டங்களில் தாமத காலம் 13 முதல் 24 மாதங்களாகவும், 142 திட்டங்களின் தாமத காலம் 25 முதல் 60 மாதங்களாகவும், 66 திட்டங்களின் தாமத காலம் 61 மாதங்களுக்கு அதிகமாகவும் இருக்கிறது என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

புள்ளியியல் துறையின் ஏப்ரல் மாத கண்காணிப்பின்படி 1061 திட்டங்களில் 241 திட்டங்களில் செலவுகள் அதிகரித்துள்ளது என்றும், 326 திட்டங்கள் காலதாம தம் ஆகிறது என்றும் குறிப்பிட்டுள் ளது. மே 2016ல் எடுத்த புள்ளி விவரங்கள் படி 1076 திட்டங்களில் 241 திட்டங்கள் திட்ட மதிப்பை விட செலவுகள் அதிகரித்துள்ளது என்றும் 330 திட்டங்கள் காலதா மதம் என்றும் குறிப்பிட்டுள்ளது. திட்டப் பணிகளை விரைவுபடுத்து வதன் மூலம் பொருளாதார வளர்ச்சி 8 சதவீத இலக்கை எட்டும் என்று அடுத்த சில ஆண்டுகளில் இரட்டை இலக்கத்துக்கு உயரும் என்றும் அரசு நம்புகிறது.

SCROLL FOR NEXT