வணிகம்

தபால் துறை பேமென்ட் வங்கிக்கு மத்திய அரசு அனுமதி: ரூ.800 கோடி முதலீடு

பிடிஐ

தபால் துறையின் பேமென்ட் வங்கிக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது. 800 கோடி ரூபாய் முதலீட்டில் பேமென்ட் வங்கி தொடங்கப்படும் என்றும் இந்தியா முழுவதும் 650 கிளைகளில் செயல்படவும் திட்டமிட்டிருப்பதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பேமென்ட் வங்கி செயல்படத் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது.

இந்தியாவில் 1.54 லட்சம் தபால் நிலையங்கள் உள்ளது. இதில் 1.39 லட்சம் தபால் நிலையங்கள் கிராமபுற பகுதிகளில் உள்ளன. புதிதாக உருவாக்கப்படும் 650 பேமென்ட் வங்கி கிளைகள் கிராமப்புற வங்கிகளுடன் இணைக்கப்படும்.

இந்த பேமென்ட் வங்கியை நிர்வகிக்க தலைமைச் செயல் அதிகாரி ஒருவர் நியமனம் செய்யப்படுவார். இவர் தவிர அரசாங்கத்தின் இதர துறைகளில் இருந்து அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள். தபால் துறை, பொருளாதார சேவைகள், செலவுகள் துறையில் இருந்து அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள்.

800 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் பேமென்ட் வங் கிக்கு 400 கோடி ரூபாய் பங்காக வும், 400 கோடி ரூபாய் கொடை யாகவும் வழங்கப்படும் என்றார்.

பெரும்பாலான தபால் நிலை யங்கள் கோர் பேங்கிங் முறையில் இணைக்கப்பட்டுள்ளன, இந்த எண்ணிக்கை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கிளைகளை விட அதிகமாகும்.

SCROLL FOR NEXT