வணிகம்

இணையம் பயன்படுத்துபவர்களில் முதலிடத்தில் மும்பை: 5-வது இடத்தில் சென்னை

பிடிஐ

இந்தியாவில் இணையதளத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் மும்பையில் இருக்கிறார்கள். இந்தியவில் 24.3 கோடி நபர்கள் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். இதில் மும்பையில் மட்டும் 1.6 கோடி நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அக்டோபர் இறுதி வரையிலான நிலவரம் இது.

இதற்கடுத்து டெல்லியில் 1.2 கோடி நபர்கள் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு வருடமும் இணையத்தை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்து வருகிறது.

இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களில் 58 சதவீத நபர்கள் மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் புணே ஆகிய 8 முக்கிய நகரங்களில் இருக்கிறார்கள்.

இதில் கொல்கத்தா மூன்றாவது இடத்திலும், பெங்களூரு நான்காவது இடத்திலும் சென்னை ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றது.

SCROLL FOR NEXT