வணிகம்

சுஸுகி நிறுவனத்தின் சிஇஓ பதவியிலிருந்து ஒஸாமு சுஸுகி விலகல்

ராய்ட்டர்ஸ்

சுஸுகி நிறுவனத்தின் தலைவர் ஒஸாமு சுஸுகி தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு அளிக்க வேண்டிய ஊதியம் மற்றும் 2015-ம் ஆண்டுக் கான போனஸ் உள்ளிட்டவை அளிக்கப்பட மாட்டாது.

கார்களின் எரிபொருள் சிக்கனம் தொடர்பான சோதனையில் சுஸுகி தயாரிப்புகள் தேர்ச்சி பெற வில்லை. இதையடுத்து அவர் தனது தலைமைச் செயல் அதி காரி பொறுப்பிலிருந்து வெளி யேறுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் தலைவராக இருந்த செயல் துணைத் தலைவர் ஒஸாமு ஹோண்டாவதும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நடந்த தவறுக்கு தார்மீக பொறுப் பேற்று ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

கார்களின் எரிபொருள் திறனை தவறான அளவீடுகளால் கணக்கிட்ட விவகாரம் தற் போது வெளியாகியுள்ளது. இந்த அளவீடுகளை 2010-ம் ஆண்டி லிருந்து இந்நிறுவனம் பின்பற்றி வருவது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே மிட்சுபிஷி மோட் டார்ஸ் கார்ப்பரேஷன் இதே பிரச்சினையில் சிக்கியுள்ள நிலையில் சுஸுகி நிறுவனமும் இந்த விவகாரத்தில் சிக்கியது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக சுஸுகி நிறுவனத்தை நிர்வகித்து வரும் ஒஸாமு சுஸுகி, கடந்த சில ஆண்டுகளாக நிறுவனத்தை மேலிருந்து கவனிப்பது தனக்கு மிகவும் சிரமமாக இருந்ததாகக் கூறியுள்ளார்.

86 வயதாகும் சுஸுகி நிறுவனத் தின் தலைவராகத் தொடர்வார். ஆனால் அன்றாட பொறுப்புகள் எதையும் அவர் கவனிக்க மாட்டார்.சுஸுகி நிறுவனம் தனது உதிரி பாகங்களை ஆலை வளாகத்தில் வைத்தே சோதித்து வந்துள்ளது. சோதனைகளில் சிறப்பாக செயல்பட்ட இவை, பொது வெளியில் சோதனை செய்யும்போது மாறுபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி பிரிவில் போதிய வெளிப்படைத் தன்மை இல்லை என்று நிறுவனம் குற்றம் சாட் டியுள்ளது. இந்நிலையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு வெளிப்படையாக செயல்பட வில்லை என்று ஒஸாமு சுஸுகியின் மூத்த மகன் தோஷிஹிரோ சுஸுகி குற்றம் சாட்டியுள்ளது குறிப் பிடத்தக்கது. கடந்த ஆண்டுதான் தந்தையிடமிருந்து பொறுப்புகளை இவர் பெற்றார்.

வாடிக்கையாளர்களிடம் நம்பகத் தன்மையை மீண்டும் பெறுவதே நிறுவனத்தின் முக்கிய இலக்கு என்று அவர் குறிப் பிட்டார்.

SCROLL FOR NEXT