கல்வித்துறையில் முன்னணி நிறுவனமாக உள்ள என்ஐஐடி நிறுவனத்தின் சர்வதேச தலைமைச் செயல் அதிகாரி. 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2013-ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை பாட்னி குரூப் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
2005-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரை லாஜிகா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
2011-ம் ஆண்டிலிருந்து 2012-ம் ஆண்டு வரை லாஜிகா நிறுவனத்தின் சர்வதேச செயல்பாடுகள் பிரிவுக்கு துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
மும்பை பல்கலைக்கழகத்தின் இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங் பிரிவில் இளநிலை பட்டமும் கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.
வெரிடீ டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.