வணிகம்

புதிய காரை அறிமுகம் செய்தது ஹோண்டா

செய்திப்பிரிவு

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் `டபிள்யூஆர்-வி என்ற புதிய காரை நேற்று அறிமுகம் செய்துள்ளது. புதுடெல்லியில் நேற்று இதற்கான அறிமுக விழா நடைபெற்றது.

ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்பான ஜாஸ் காரை அடிப் படையாக கொண்டு டபிள்யூஆர்-வி கார் பெட்ரோல் மற்றும் டீசல் எனும் இரண்டு வகைகளிலும் இயங்கும்படி தயாரிக்கப் பட்டுள்ளது. பெட்ரோலில் இயங் கும் டபிள்யூஆர்-வி கார் 1.2 லிட் டர் இன்ஜினுடனும் டீசலில் இயங் கும் கார் 1.5 லிட்டர் பவர்டிரைன் ஸுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த கார்களின் டெல்லி விற்பனையக விலை ரூ.7.75 லட்ச ரூபாயிலிருந்து ரூ.9.99 லட்ச ரூபாய் வரை உள்ளது.

``வேகமாக வளர்ந்து வரும் இந்திய சந்தையில் அழகான வடி வமைப்பு கொண்ட தொழில்நுட்ப வசதிகள் கொண்ட காம்பெக்ட் வாகனங்களுக்கு சந்தையில் தேவை இருந்து வருகிறது. டபிள்யூஆர்வி எங்களது இமேஜை உயர்த்தும் என்று நாங்கள் நம்பு கிறோம்’’ என்று ஹோண்டா இந்தியா நிறுவனத்தின் தலை மைச் செயல் அதிகாரி யோய்ச் சிரோ உனோ தெரிவித்தார்.

புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் ஹோண்டா டபிள்யூஆர்-வி புதிய காரை அறிமுகப்படுத்தும் ஹோண்டா மோட்டார்ஸ் ஆசிய பிரிவின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி நோரியகே அபே மற்றும் ஹோண்டா இந்தியா பிரிவின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி யோய்ச்சிரோ உனோ.

SCROLL FOR NEXT