வணிகம்

பிஎஸ் 3 வாகனங்களுக்கு தடை: டிராக்டர், ஜேசிபி-யை பதிவு செய்ய மாநில ஆர்டிஓ-க்கள் மறுப்பு

செய்திப்பிரிவு

ஏப்ரல் 1-ம் தேதி முதல் பிஎஸ் 3 தகுதி சான்று பெற்றிருக்கும் வாகனங்களை விற்பனை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் இறுதியில் தடைவிதித்தது. ஆனால் டிராக்டர் மற்றும் ஜேசிபி வாகனங்களுக்கு வேறு வகையாக தகுதி சான்று இருக்கும் நிலையில், மாநில போக்குவரத்து அலுவலகங்கள் இந்த வகையான வாகனங்களை யும் பதிவு செய்ய மறுப்பு தெரிவிக் கின்றன. இதனால் 25,000 டிராக் டர்கள் மற்றும் 1,500 கட்டுமான உற்பத்தி வாகனங்கள் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன.

தமிழ்நாடு, டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரபிரதேசம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநில போக்குவரத்து அலுவலகங்கள் பதிவு செய்யவில்லை.

கார்கள், லாரிகள், இருசக்கர வாகனங்களுக்கு தகுதி சான்று பிஎஸ் 3, பிஎஸ் 4 என்று வழங்கப் படும். ஆனால் டிராக்டர்கள் பாரத் டிராக்டர் (டிஆர்இஎம்) எமிஷன் 3ஏ விதிமுறையை பின்பற்று கின்றன. கட்டுமான உற்பத்தி வாக னங்கள் வேறு வகையான தகுதி சான்றினைப் பின்பற்றுகின்றன.

ஆனால் உச்ச நீதிமன்றத் தின் உத்தரவினை மாநில போக்கு வரத்து அலுவலகங்கள் தவறாக புரிந்துகொண்டிருக்கின்றன. இதனால் இந்த வகையான வாகனங்கள் பதிவு செய்யப்பட வில்லை என கட்டுமான சாதன உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஆனந்த் சுந்தரேசன் தெரிவித்தார்.

கட்டுமான பணிகள் அதிகம் நடக்கும் இதுபோன்ற காலத்தில் வாகனப் பதிவு நடக்காதது பெரும்பாதிப்புகளை உருவாக்கி இருக்கிறது. கட்டு மானம் நடக்காததால், பணியாளர் களுக்கு சம்பளம் கிடைக்க வில்லை, ஒட்டுமொத்த துறையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மாதம் 5,000 வாகனங்கள் விற்பனை யாகும். ஆனால் இதில் 30 சதவீத கட்டுமான சாதன வாகனங்கள் பதிவு செய்யப்படுவதில்லை என்று சுந்தரேசன் தெரிவித்தார்.

டிராக்டர் உற்பத்தியாளார் சங்கம் எவ்வளவு வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்னும் தகவலை வெளியிடவில்லை. ஆனால் பல மாநிலங்களில் இந்த பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக, டிராக்டர் உற்பத்தியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

நான்கு சக்கர வாகனங்களுக்கு பிஎஸ் 4 தகுதி சான்று இல்லை என்றால் பதிவு செய்வதில்லை. ஆ.ர்டி.ஓ-க்களுக்கு விதிமுறைகள் குறித்து முழுமையாக தெரியாததே இதற்கு காரணம். அதனால் மாநில மற்றும் மத்திய அரசுகள் இதுகுறித்து விரைவில் அறிக்கை வெளியிட வேண்டும் என மற்றொரு டிராக்டர் உற்பத்தியாளர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT