சுற்றுலாத் துறையில் சர்வதேச அளவில் முக்கிய நிறுவனமான ஏர்பிஎன்பி (airbnb) நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
ரூட் ஸ்கூல் ஆப் டிசைன் கல்லூரியில் தொழில்துறை வடிவமைப்பியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்.
2005-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை 3டிஐடி நிறுவனத்தின் தொழில்துறை வடிவமைப்பாளராக இருந்தவர்.
பிரையன் செஸ்கி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
இவரின் மொத்த சொத்து மதிப்பு 330 கோடி டாலர்.
2015-ம் ஆண்டு டைம் பத்திரிகை வெளியிட்ட 100 அதிகாரமிக்க நபர்கள் பட்டியலில் இடம்பெற்றவர்.
2015-ம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பணக்கார தொழில்முனைவோர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர்.
2015-ம் ஆண்டு சர்வதேச தொழில்முனைவு அமைப்புக்கு தூதராக இருந்தவர்.