போட்டி ஒழுங்குமுறை ஆணையம் (சிசிஐ) 11 சிமென்ட் நிறுவனங் களுக்கு ரூ.6,700 கோடி அளவுக்கு அபராதம் விதித்திருக்கிறது. அல்ட்ராடெக், பினானி, ராம்கோ, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஜேகே.சிமென்ட், லபார்ஜ், இந்தியா சிமென்ட், ஏசிஎல், ஏசிசி, செஞ்சுரி,ஸ்ரீ சிமென்ட் ஆகிய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. தவிர சிமென்ட் உற்பத்தியாளர் சங்கத்துக்கும் சேர்த்து அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
ஏசிசி நிறுவனத்துக்கு ரூ.1,147 கோடி, ஏசிஎல் நிறுவனத்துக்கு ரூ.1,163 கோடி, பினானி நிறுவனத்துக்கு ரூ.167 கோடி, செஞ்சுரிக்கு ரூ.274 கோடி, இந்தியா சிமென்டுக்கு ரூ.187 கோடி, ஜேகே சிமென்ட்டுக்கு ரூ.128 கோடி, லபார்ஜுக்கு ரூ.490 கோடி, ராம்கோவுக்கு ரூ.258 கோடி, அல்ட்ராடெக் நிறுவனத் துக்கு ரூ.1,175 கோடி மற்றும் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸுக்கு ரூ.1,323 கோடி மற்றும் சிமென்ட் உற்பத்தியாளர் சங்கத்துக்கு ரூ.73 லட்சம் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. கட்டுமானத் துறையின் முக்கிய மூலப்பொருள் சிமென்ட் என்பதால் மொத்த பொருளாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாகவே சிமென்ட் நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்துக்கு எதி ராக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக சிசிஐ தெரிவித்துள்ளது.
தவிர முறையற்ற தொழில் நடவடிக்கை காரணமாக ஸ்ரீ சிமென்ட்க்கு ரூ.397 கோடி அபராதத்தையும் சிசிஐ விதித்திருக்கிறது.