வணிகம்

சிறு தொழில் நிறுவனங்களுக்கான டிஜிட்டல் பயிற்சியில் கூகுள் இந்தியா

செய்திப்பிரிவு

சிறு தொழில் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் பயிற்சி அளிக்க கூகுள் இந்தியா நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கூகுள் இணையதளத்தை தங்களின் தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதற்கான முனைப் பில் கூகுள் இந்தியா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக `டிஜிட்டல் அன்லாக்டு’ என்கிற திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பான நிகழ்ச்சியில் நிறுவனத்தின் சந்தை தீர்வுகள் துறை தலைவர் ஷாலினி கிரிஷ் கூறியதாவது:

இந்தியாவில் 40 கோடி இணைய பயனாளிகள் உள்ளனர். இவர்களுக்கான வணிக தகவல்களைக் கொண்டு சேர்ப் பதற்காக இந்த முயற்சியை மேற் கொண்டுள்ளோம். முக்கியமாக இந்தியாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களில் சுமார் 17,000 நிறுவனங்களுக்கு மட்டுமே இணையதள வசதி உள்ளன. இதனால் அனைத்து சிறு தொழில் களும் கூகுளை பயன்படுத்தி சொந்த வலைதளத்தை உரு வாக்கும் விதமாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 10 நிமிடங் களில் சொந்தமாக வலைதளம் உருவாக்குவதுடன், இதற்கான பயிற்சிகளை ஆன்லைன் மற்றும் நேரடி பயிற்சிகள் மூலமும் கூகுள் வழங்க உள்ளது.

இந்த பயிற்சிக்கான சான்றிதழை இந்தியன் பிசினஸ் பள்ளியும் (ISB), இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பும் (FICCI) இணைந்து வழங்க உள்ளன. இந்த முயற்சிகள் தவிர, இந்திய ரயில்வேயுடன் இணைந்து ரயில் நிலையங்களில் வை-பை சேவை, கிராமப்புற பெண்களுக்கு இணைய கல்வியை அளிக்கும் `இண்டெர்நெட் சாத்தி’ போன்ற திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.

நிகழ்ச்சியில், கூகுளை பயன் படுத்தி சாதனை புரிந்த தொழில் முனைவோர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர் களையும் அவர் கவுரவித்தார்.

SCROLL FOR NEXT