கூகுள் நிறுவனம் ரயில்டெல் நிறுவனத்துடன் இணைந்து முக்கிய ரயில் நிலையங்களில் வைஃபை வசதியை இலவசமாக அளிக்கிறது. இந்த வசதியை மாதந்தோறும் 20 லட்சம் பயணிகள் பயன்படுத்துவதாக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தர் பிச்சை தெரிவித்தார்.
இந்திய ரயில்வேத்துறை மற்றும் ரயில்டெல் நிறுவனத்துடன் இணைந்து அதிவேக வயர்லெஸ் சேவையை பயணிக்கும் லட்சக் கணக்கான பயணிகளுக்கும் கிடைக் கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று முதலீட்டாளர்கள் மத்தியில் பேசுகையில் சுந்தர் பிச்சை குறிப்பிட்டார்.
இப்போது முக்கிய ரயில் நிலையங்களில் இத்தகைய வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 லட்சம் பயணிகள் மாதந்தோறும் இத்தகைய வசதியைப் பயன்படுத் துகின்றனர். சராசரியாக நாள் முழுவதும் பயன்படுத்தும் அதாவது தரவிறக்கம் செய்யும் அளவைக் காட்டிலும் 15 மடங்கு கூடுதலாக ரயில் நிலையங்களில் பதிவிறக்கம் செய்வதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்திய ரயில்வேயின் தொலைத் தொடர்பு பிரிவான ரயில்டெல் நிறுவனத்துடன் இணைந்து இலவசமாக வைஃபை வசதியை 23 ரயில் நிலையங்களில் அளிக்கிறது.
மும்பை சென்ட்ரல், புணே, புவனேஸ்வரம், போபால், ராஞ்சி, ராய்பூர், விஜயவாடா, கச்சேகுடா, எர்ணாகுளம் சந்திப்பு, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், பாட்னா, குவஹாட்டி, உஜ்ஜைன், அலாகாபாத், சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் அதிவேக இலவச வைஃபை வசதி அளிக்கப்படுகிறது. இத்திட்டத் தின்படி 100 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதியை அளிப்பதே நோக்கமாகும்.
இந்தியாவில் தற்போது இணை யதள வாடிக்கையாளரன் எண் ணிக்கை 34 கோடியாக உள்ளது. இதில் பெருமளவு செல்போன் மூலம் உபயோகிப்பவர்களாக உள்ளனர். பார்தி ஏர்டெல் நிறுவனம் 9 கோடி வாடிக்கையாளர்களையும். வோடபோன் (6 கோடி), ஐடியா செல்லுலர் (4 கோடி), ரிலையன்ஸ் (3 கோடி) வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளன. அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் 3 கோடி இணையதள வாடிக்கையாளர்களைக் கொண் டுள்ளது.