பொதுத்துறை வங்கியான பேங்க் அப் பரோடாவின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 60 சதவீதம் சரிந்து ரூ.423 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.1,052 கோடி அளவுக்கு நிகர லாபம் இருந்தது. வாராக்கடனுக்காக அதிக தொகை ஒதுக்கீடு செய்ததால் நிகர லாபம் சரிந்தது. அதே சமயத்தில் கடந்த இரு காலாண்டுகளாக நஷ்டமடைந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கியின் மொத்த வருமானமும் சரிந்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் ரூ.12,243 கோடியாக இருக்கும் மொத்த வருமானம் இப்போது 11,877 கோடியாக இருக்கிறது.
வாராக்கடன் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண் டில் 4.13 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 11.15 சதவீத மாக இருக்கிறது. அதேபோல கடந்த ஜூன் காலாண்டில் 2.07 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் 5.73 சதவீதமாக இருக்கிறது.
கடந்த வருடம் ஜூன் காலாண்டில் ரூ.599 கோடி வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்டது. இந்த தொகை இப்போது ரூ.2,004 கோடியாக இருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 9.01 சதவீதம் சரிந்து 145.95 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.