இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி அடுத்த இரண்டு ஆண்டுகளில் 8 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச தரப் புள்ளி நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்ட் பூர் ஆய்வறிக்கை கூறியுள்ளது.
வளர்ச்சியின் தரம் தொடர்ந்து மேம்பட்டு வருவதால் 2017 மற்றும் 2018 நிதியாண்டில் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அதிகரிக்கும் என கணிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது. நேற்று வெளியிட்ட `ஆசிய பசிபிக் பொருளாதார குறிப்புகள்’ என்கிற அறிக்கையில் இதை குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச அளவிலான இதர தர மதிப்பீட்டு நிறுவனங்களை விட ஸ்டாண்டர்டு அண்ட் பூர் நிறுவனம் இந்திய ஜிடிபி வளர்ச் சியை அதிகமாக கணித்துள்ளது. சர்வதேச செலாவணி நிதியம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய ஜிடிபி வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வு பொருளா தார மறு சீரமைப்பு நடவடிக்கை கள் அடிப்படையில் மதிப்பிட் டுள்ளதாக ஸ்டாண்டர்டு அண்ட் பூர் குறிப்பிட்டுள்ளது.