வணிகம்

செலவு குறைப்பு நடவடிக்கை: மெக்டொனால்ட்ஸ் பணிகள் இந்தியாவுக்கு வருகிறது

செய்திப்பிரிவு

துரித உணவு நிறுவனமான மெக் டொனால்ட்ஸ் நிறுவனம் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. தங்கள் வசம் உள்ள சில தொழில்களை அவுட்சோர்ஸிங் செய்வதன் மூலம் 50 கோடி டாலர் வரை மிச்சப்படுத்த திட்டமிட்டுள்ளது. செலவுக் கட்டுப்பாட்டுக்கான இந்த திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே அறிவிக்கப் பட்டது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீவ் ஈஸ் டர்ப்ரூக் சில தொழில்களை வெளிப் பணி ஒப்படைப்பு மூலம் நிறை வேற்ற உள்ளதாக நியூயார்க் போஸ்ட் அறிக்கை தெரிவித்துள் ளது. இந்தப் பணிகள் இந்தி யாவிலிருந்து நிறைவேற்றப் படும் என்று தகவல் அறிந்தவர்கள் கூறியுள்ளனர்.

சிக்கன நடவடிக்கையால் பாதிக்கப்படும் அலுவலகங்களில் கொலம்பஸ், ஒஹையோ ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும்.

தங்களது செயல்பாடுகளை நிரந்தரமாக மறுசீரமைப்பது மற்றும் பலரை வேலையிலிருந்து நீங்க வேண்டியிருக்கும் என்றும் மே 13 ஆம் தேதி பணியாளர் களுக்கு செய்தி அனுப்பியுள்ளது. இந்த நடவடிக்கைகளை ஜூலை மாத தொடக்கத்திலிருந்து டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப் படும் என்றும் தகவல்கள் தெரி விக்கின்றன.

குறைந்தபட்சம் 70 பேர் வேலையிழக்கும் பட்சத்தில் அவர்கள் மேற்கொண்ட பணிகள் இந்தியாவிலிருந்து நிறைவேற்றப் படும். இதனால் செலவு கணிச மாகக் குறையும் என நிறுவனம் நம்புகிறது.

நிறுவனத்தின் விற்பனை ஒரே நிலையில் தொடர்வதால் மண்டல அலுவலகங்களை குறைக்க முடிவு செய்தது. 40 மண்டல அலுவலகங்களை 25 ஆககுறைத் துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT